சட்டன் தமிழ் பாடசாலை (ஆரம்பம் 2007)
சனிக்கிழமைகள் தோறும் தவணை நாட்களில் தொடர்ந்து 18 வருடங்களாக Manor Park primary School, 1, Greyhound Road, Sutton, SM1 4AW விலாசத்தில் இயங்கி வருகிறது. தமிழ் மொழி, நடனம் சங்கீதம், மிருதங்கம், வயலின் பிற கலைப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தமிழ் மொழி, ஆரம்ப கல்வி முதல், கல்விக்கான பொது சான்றிதழ் (GCE A/L) வரை அனுபவம் வாய்ந்த ஆசிரியைகளால் தனித்தனி வகுப்பறைகளில் கற்பிக்கப்படுகிறது. Cambridge பல்கலைக்கழக O/L மற்றும் A/L பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். தமிழ் மொழி பிரித்தானியாவில் தவணை தோறும் 13 நேர் முக வகுப்புக்கள், தேவைக்கேற்ப காண் நிலை (zoom) வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. பட்டயம் பெற்ற பிரபல ஆசிரியைகளால் கலைப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
  • கலைப் பாடங்களுக்கும் ஆண்டு தோறும் தேசிய மட்ட பரீட்சைக்கும் மாணவர்கள் தயாராக்கப்படுகின்றனர்.
  • ஆண்டு தோறும் பரிசளிப்பு விழா, நத்தார் விழா, விளையாட்டுப்போட்டி என்பன பார்வையாளர்களை உள்ளடக்கிய மண்டபங்களிலும் தைப்பொங்கல், நவராத்திரி விழா, மாவீரர் நாள், பாடசாலை மண்டபத்திலும் நடாத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர்கள் தம் இயல், இசை நாடக திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப்போட்டி என்பன நடாத்தப்பட்டு மாணவர்கள், கலைத்திறன் மேம்பட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  • கூடிய வயதிலும் தமிழ் கற்க இணையும் மாணவர்கள் மீது, மேலதிக கவனம் எடுக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனித்தனி கவனம் எடுக்கப்படுகிறது.
  • ஆசிரியர்கள், பிரதம நிர்வாகிகள், உரிய தராதரங்களை பெற்றுள்ளனர்.
  • பெற்றோர்கள், சங்கத்தின் ஊடாக வழங்கும், பொருத்தமான ஆலோசனைகள் உடனுக்கு உடன், நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • பெற்றோர்களே பிள்ளைகளுக்காக இப்பாடசாலையை லாப நோக்கு இன்றி இயக்குகின்றனர்.

Sutton Tamil School is an educational institution dedicated to nurturing the Tamil language, culture and community. Founded in May 2007, our school prides itself on providing the children of Sutton with an excellent education in not only the Tamil language, but also fine arts such as Bharathanatyam, Carnatic Vocal, Violin and Mridangam.

Our Tamil curriculum is based on the British Tamil Language Examination Board criteria, and we also offer GCSE and A Level qualifications in conjunction with Cambridge Assessment International Education board.

Home to over 150 students, we regularly give the opportunity to showcase their talent with two annual shows, our Aandu Vizha in the Summer term and Naththaar Vizha in December. We also annually hold a Sports Day, Barbeque, Thai Pongal and Navatri celebrations as well as Speech, Thirukkural and Drawing competitions to encourage our students.

Please feel free to contact Jeyapaalen at 07429702263 to hear more information on admissions or email us at [email protected] if you would prefer.